Advertisements




 
 
 
 
 
 

சச்சினுக்கு லாரா ஆதரவு

.

Sunday, 16 September, 2012   03:25 PM
.
கொழும்பு, செப். 16:கிரிக்கெட்டில் இருந்து எப்போது ஓய்வு பெற வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கருக்கு தெரியும் என்று வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா கூறியுள்ளார்.
.
கிரிக்கெட் உலகில் சச்சின் டெண்டுல்கர் சாதனை மேல் சாதனை புரிந்து வருகிறார். சாதனை மன்னதாக திகழும் அவர் கடந்த 23 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். இதனிடையே, அவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற வேண்டுமா என்பது தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் 3 முறை போல்ட் ஆனதால் கடும் விமர்சனத்திற்கு ஆளானார். இதனால் அவர் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்து விட்டதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். சச்சின் டெண்டுல்கர் புகழின் உச்சியில் இருக்கும் போதே ஓய்வு பெற்றுவிட வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான்கான் கூறியிருந்தார்.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா சச்சின் டெண்டுல்கருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறுவது தொடர்பாக மற்றவர்கள் முடிவெடுக்க கூடாது என்று கூறியுள்ள லாரா, எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது சச்சின் டெண்டுல்கருக்கு நன்றாக தெரியும் என்று கூறியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட்டின் சொத்து மட்டுமல்ல, சர்வதேச கிரிக்கெட்டின் சொத்து என்று கூறியுள்ள லாரா, ஓய்வு முடிவை அவரிடமே விட்டு விட வேண்டும் என்று கூறியுள்ளார். சச்சின் போன்ற மகத்தான வீரரை நெருக்கடிக்கு ஆளாக்க கூடாது என்று கூறியுள்ள லாரா, அவர் எவ்வளவு காலம் விளையாடுகிறாரோ, அவ்வளவு காலம் அவரது ஆட்டத்தை பார்த்து ரசிக்க வேண்டும் என்றும் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
| |

மற்றவை :