Advertisements




 
 
 
 
 
 

ரெயில் நேரம் மாற்றம்

.

Thursday, 13 September, 2012   04:08 PM
.

திருச்சி, செப்.13:புதுச்சேரி  மங்களூர் வாராந்தரி ரெயில் புறப்படும் நாளும், நேரமும் மாற்றப்பட்டுள்ளதாக திருச்சி ரெயில்வே டிவிஷன் அலுவலகம் அறிவித்துள்ளது.
.
ரெயில் எண். 16855, புதுச்சேரி மங்களூர் சென்ட்ரல் வாராந்திர ரெயில் இதுவரையிலும் வெள்ளிக் கிழமைகளில் இயக்கப்பட்டது. இந்த ரெயில் இனிமேல் இன்று முதல் வியாழக்கிழமைகளில் இயக்கப் படும். இதேபோன்று ரெயில் எண்.16856 மங்களூர்  சென்ட்ரல்புதுச்சேரி வாராந்திர ரெயில் இதுவரை சனிக் கிழமைகளில் இயக்கப்பட்டது. இது 14.9.2012 முதல் வெள்ளிக்கிழமை களில் இயக்கப்படும்.

புதுச்சேரி  மங்களூர் ரெயில் புதுச்சேரியில் இருந்து வியாழக்கிழமை களில் மாலை 4.35 மணிக்கு புறப் படுகிறது. இது மங்களூர் ரெயில் நிலையத்தை மறுநாள் காலை 9.45 மணிக்கு வந்தடைகிறது. இதேபோன்று மங்களூர் சென்ட்ரல் புதுச்சேரி வாராந்திரி ரெயில் வெள் ளிக்கிழமைகளில் மாலை 5.05 மணிக்கு மங்களூரில் இருந்து புறப் படுகிறது. இது மறுநாள் காலை 10 மணிக்கு புதுச்சேரி வந்து அடைகிறது.

இந்த ரெயில் விழுப்புரம், விருத்தா சலம், சின்ன சேலம், ஆத்தூர், சேலம் டவுன், சேலம் சந்திப்பு, ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகியரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
| |

மற்றவை :