Advertisements




 
 
 
 
 
 

போர் கப்பல் லிபியா விரைந்தது

.

Thursday, 13 September, 2012   03:25 PM
.
வாஷிங்டன்,  செப்.13:அமெரிக்க தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து லிபியாவுக்கு விமானம் தாங்கிய 2 போர்க் கப்பல்களை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. 
.
இந்த தாக்குதலுக்கு காரணமான சதிகாரர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா ஆவேசமாக கூறியுள்ளார்.
லிபியா நாட்டின் பென்காசியில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது நேற்று திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. ராக்கெட் குண்டுகளை வீசி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் லிபியாவுக்கான அமெரிக்க தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸ் கொல்லப்பட்டார். மேலும் 3 தூதரக ஊழியர்களும் உயிரிழந்தனர்.

இஸ்லாமியர்களை புண்படுத்தும் வகையில் காட்சிகளை கொண்ட திரைப்படம் ஒன்று வெளியானதற்கு அமெரிக்காவே காரணம் என்று ஆவேசமடைந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலை அடுத்து அமெரிக்கா 2 விமானம் தாங்கி போர்க் கப்பல்களை லிபியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. தாக்குதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க விரும்பினால் அதற்கு ஏற்ற வகையில் இந்த கப்பல்கள் லிபியாவை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

இந்த தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க தூதரகங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை அல்கொய்தா ஆதரவு தீவிரவாதிகள் நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
| |

மற்றவை :