Advertisements




 
 
 
 
 
 

மருத்துவமனையில் பிபாஷாபாசு

.

Thursday, 13 September, 2012   03:21 PM
.
மும்பை,  செப். 13:பிரபல பாலிவுட் நடிகை பிபாஷா பாசு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருக்கிறார். .
.
இந்தி திரைப்பட உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்குபவர் பிபாஷா பாசு.இவர் நடித்து வெளியான ராஸ் 3 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில், பிபாஷா பாசு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பி இருக்கிறார். இந்த தகவலை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து ரசிகர்கள் கவலை அடைய வேண்டாம் என்றும், காய்ச்சல் காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டதாகவும், தற்போது குணமாகி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ராஸ் 3 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாகவும், இதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அவர்கூறியுள்ளார்
| |

மற்றவை :