சிலிண்டர் வெடித்து 3 பேர் பலி |
||
. |
||
Thursday, 13 September, 2012 12:51 PM
|
||
| . | ||
சென்னை, செப். 13:சென்னை திருமங்கலத்தில் வீட்டில் காஸ் கசிவை சரி செய்து கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் சிலிண்டர் வெடித்து 3 பேர் பரிதாப மாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். |
||
| . | ||
சென்னை திருமங்கலம் பாடிகுப்பம் ரோடு விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவரது வீட்டில் சிலிண்டரில் இருந்து காஸ் கசிந்து உள்ளது.இது குறித்து அண்ணாநகர் மேற்கில் உள்ள காஸ் ஏஜென்சிக்கு நேற்று மாலை தகவல் தெரிவித்தனர். இதையடுத்து செனாய் நகர், பாரதி நகர் 6வது தெருவைச் சேர்ந்த துரைராஜ் (வயது 35) என்பவர் விரைந்து சென்று காஸ் கசிவை சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் திடீரென காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் சேகரின் மனைவி ஜோதி லட்சுமி (வயது 38), அவரது மகன் சுரேஷ் (வயது 17). இவர் லயோலா கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாவது ஆண்டு படித்து வருகிறார். ஜோதி லட்சுமியின் அண்ணன் ரவி (வயது 45) ஆகியோர் உடல் முழுவதும் தீ பரவி படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தால் வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இந்த தீ அருகில் உள்ள ராமுவின் வீட்டிற்கும் பரவியது. அங்கு விளையாடிக்கொண்டிருந்த ராமுவின் மகன் பாலாஜி (வயது 6) மீதும் தீ பரவியது.இது குறித்து தகவல் அறிந்ததும் அண்ணாநகர், கோயம்பேடு, கீழ்ப்பாக்கம் பகுதிகளில் இருந்து தீய ணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் படுகாயம் அடைந்த 5 பேரை கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித் தனர். ஆனால் இன்று அதிகாலை 3 மணியளவில் காஸ் ஏஜென்சி ஊழியர் துரைராஜ், ஜோதி லட்சுமி, சுரேஷ் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் ரவி தீவிர சிகிச்சை பிரி விலும், பாலாஜி மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது தீ விபத்து குறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். |
||
![]() |
||
மற்றவை : |
||
|
|
||























