Advertisements




 
 
 
 
 
 

5 கிலோ தங்கம் கொள்ளை

.

Thursday, 30 August, 2012   03:05 PM
.
சென்னை, ஆக. 30: தனியார் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த நகை வியாபாரிகளிடம் 5.50கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
.
கொள்ளைப்போன நகைகளின் மதிப்பு பல கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது: மும்பையைச்சேர்ந்த நகை வியாபாரிகள் மனோஜ், குருஜி. இவர்கள் இருவரும் மதுரையில் உள்ள நகைக்கடையில் புதிய நகைகளை விற்றுவிட்டு 5.50கிலோ எடையுள்ள பழைய நகைகளை எடுத்துக்கொண்டு மும்பை செல்வதற்கு மதுரையில் இருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி பேருந்தில் நேற்றிரவு பயணம் செய்தனர்.

இவர்கள் இரவு நேரம் என்பதால் இருவரும் நகைகளை சீட்டின்கீழே வைத்து விட்டு தூங்கி கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை 5மணியளவில் பேருந்து பெருங்களத்தூர் அருகே வந்த போது கண்விழித்த இவர்கள் நகைகளை பார்த்துள்ளனர். அப்போது நகைகள் வைத்திருந்த பை மாயமாகி இருந்ததை கண்டுஅதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பஸ் டிரைவரிடம் இதுகுறித்து தகவல் கொடுத்தனர். பஸ்சை தாம்பரத்தில் நிறுத்தி விட்டு பயணிகளிடமும் அவர்களின் பொருட்களையும் தீவிர சோதனை செய்தனர்.

ஆனால் நகைகள் இல்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து மனோஜ், குருஜி ஆகியோர் எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் கமிஷனர் திரிபாதி உத்தவுப்படி தாம்பரம் உதவி ஆணையர் பரந்தாமன் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, ஆம்னி பேருந்து டிரைவர் மற்றும் நடத்துனரிடம் முன்பதிவு செய்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மதுரையில் இவர்கள் நகைகளுடன் கிளம்பும்போது மர்ம ஆசாமிகள் பின்தொடர்ந்துவந்து கைவரிசை காட்டினார்களா? அல்லது பயணிகள் யாராவது பைகளை எடுத்துக்கொண்டு இறங்கி விட்டனரா என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
| |

மற்றவை :