Advertisements




 
 
 
 
 
 

அதிமுக கவுன்சிலர் உட்பட 5 பேர் பலி

.

Tuesday, 28 August, 2012   03:04 PM
.
பெரம்பலூர்  , ஆக. 28: பெரம்பலூர் அருகே பழுதாகி நின்ற பேருந்து மீது சென்னையில் இருந்து மதுரைக்கு சென்ற மற்றொரு பஸ் மோதியதில் அதிமுக பெண் கவுன்சிலர் உட்பட 5பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 16 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.
.
இந்த சோக சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது: சென்னையில் இருந்து திருச்சி நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றது. அந்த பேருந்து பெரம்பலூர்  அருகே ஆலந்தூர் கேட் அருகே பழுதாகி நின்றதாக கூறப்படுகிறது.    அதே மார்க்கத்தில் சென்னையில் இருந்து மதுரைக்கு சென்ற தனியார் பேருந்து பழுதாகி நின்ற பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் சென்ற பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். இது குறித்து பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த திருச்சி மாநகராட்சி 15வது வார்டு அதிமுக கவுன்சிலர் அமுதா (வயது 45) பூமாலையின் மனைவி. அவரது மகன் ஆனந்த்குமார் (வயது 20),  பழனியைச்சேர்ந்த  முத்தையாவின்  மகள் வாசுகி (வயது 21) அடையாளம் தெரியாத 2பேர் உட்பட 5பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.

 வாசுகியின் தாய் நாகேஸ்வரி (வயது 50) , மேலூர் கொன்னப்பட்டியைச்சேர்ந்த கருப்பையா(வயது 25), புதுக்கோட்டையைச்சேர்ந்த ராஜீவ்குமார் ,  சென்னை மேற்கு தாம்பரத்தைச்சேர்ந்த முருகன் (வயது 33), புதுக்கோட்டை நாகசந்கோட்டையைச்சேர்ந்த பழனியப்பன்,   திருச்சி பொன்மலையைச்சேர்ந்த செந்தில்குமார் (வயது 33),  மதுரை மேலூரைச்சேர்ந்த சரவணகுமார் (வயது25) உட்பட பலத்த காயமடைந்த 16 பேர்  திருச்சி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். பேருந்து டிரைவர் தூக்ககலக்கத்தில் பழுதாகி நின்ற பேருந்து மீது மோதியதாக தெரிகிறது. மேலும் இந்த விபத்தில் மரணமடைந்த அடையாளம் தெரியாதவர்கள் குறித்து தீவிர  விசாரணை நடத்தி வருகின்றனர்.
| |

மற்றவை :