Advertisements




 
 
 
 
 
 

ஹமீத்அன்சாரி வெற்றி

.

Wednesday, 08 August, 2012   03:04 PM
.
புதுடெல்லி, ஆக. 8: துணை ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹமீத் அன்சாரி சனிக்கிழமை அன்று பதவியேற்கிறார்.
.
துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று டெல்லியில் நடந்தது. தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் ஹமீத் அன்சாரி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க. மூத்த தலைவர் ஜஸ்வந்த்சிங் போட்டியிட்டனர்.

பாராளுமன்றத்தில் உள்ள 63ம் எண் அறையில் ஓட்டுப்பதிவு நடந்தது. பாராளுமன்ற இரு சபைகளிலும் உள்ள 787 எம்.பி.க்களில் 736 எம்.பி.க் கள் வாக்களித்தனர். பிஜு ஜனதா தளத்தை சேர்ந்த 21 எம்.பி.க்கள், தெலுங்கு தேசத்தை சேர்ந்த 11 எம்.பி.க்கள் உள்பட 47 எம்.பி.க்கள் வாக்களிக்க வில்லை.

வாக்களித்த 736 எம்.பி.க்களில் 8 பேரின் ஓட்டுக்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. ஓட்டு எண்ணிக்கை முடிவில் ஹமீத் அன்சாரி 252 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஹமீத் அன்சாரிக்கு 490 ஓட்டுக்களும் ஜஸ்வந்த்சிங்குக்கு 238 வாக்குகளும் கிடைத்தன. 75 வயதாகும் ஹமீத் அன்சாரி, இந்த வெற்றி மூலம் மீண்டும் 2வது தடவையாக துணை ஜனாதிபதி ஆகியுள்ளார்.

ஹமீத் அன்சாரியின் தற்போதைய பதவிக்காலம் நாளை மறுநாள் (10ந்தேதி) முடிகிறது. பதவியை தொடர்வதற்காக அதற்கு மறுநாளே, அதாவது 11ந்தேதி (சனிக்கிழமை) அவர் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொள்கிறார். அவரது பதவி ஏற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும்.
| |

மற்றவை :