Advertisements




 
 
 
 
 
 

வேன்கள் மோதல்:ஒருவர் பலி

.

Sunday, 05 August, 2012   03:17 PM
.
 காஞ்சிபுரம், ஆக.5: சென்னை ராயபுரம் பகுதியில் தனியார் ஷý தயாரிக்கும் தொழிற் சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை யில் ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
.
இந்நிலையில் தொழிலாளர்கள் நேற்று மாலை பணி முடித்துவிட்டு காஞ்சிபுரம் நோக்கி வேனில் சென்று கொண்டிருந்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் பஜார் பகுதியில் வேன் சாலையை கடக்கும்போது கண்டெய்னர் மீது மினி வேன் மோதியது. இந்த விபத்தில் வேனில் இருந்த பரத் (வயது 21), தமிழரசி ( வயது 19), கீர்த்தனா (வயது 16), தன லட்சுமி (வயது 21), தேனி (வயது 19), பிரியா (வயது 19), ராஜா (வயது 31), பத்மா (வயது 32), சத்யா (வயது 21) ஆகியோர் காயம் அடைந்தனர்.

கண்டெய்னர் வேனில் இருந்த ஆனந்தன், நடராஜ், கார்த்திக், ரூபேஷ் ஆகியோரும் காயம் அடைந்தனர். இந்த விபத்தில் ஒருவர் மட்டும் அடையாளம் தெரியவில்லை. சம்பவ இடத்தில் ஒருவர் பலியானார். அவரது அடையாளம் தெரியவில்லை. இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
| |

மற்றவை :