ஒபாமா நேரில் ஆறுதல் |
||
. |
||
Sunday, 22 July, 2012 02:52 PM
|
||
| . | ||
வாஷிங்டன், ஜூலை 22:அமெரிக்காவில் பேட்மேன் படம் வெளியான திரையரங்கில் மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் பலியானவர்கள் குடும்பத்தினரை அமெரிக்க அதிபர் ஒபாமா நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். |
||
| . | ||
அமெரிக்காவின் கொல ராடோ மாகாணத்தில் டென்வர் நகரின் புறநகர் பகுதியில் அரோராவில் ஒரு சினிமா தியேட்டரில் புகுந்த மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். அதில் 12 பேர் உயிரிழந்தனர். 70 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக ஜேம்ஸ் ஹோம்ஸ் என்பவனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவனது வீட்டில் சோதனை நடத்தியதில் வெடி பொருட்கள் குவியலை பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவை தொட்டவுடன் வெடிக்க கூடியது. எனவே அவற்றை ரோபோ மூலம் அழிக்க தீவிர நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், துப்பாக்கி சூட்டில் பலியானாவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற அதிபர் ஒபாமா விரும்புகிறார். அதற்காக இன்று கொலராடோ மாகாணம் செல்கிறார். துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து அரோரா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்திக்கிறார். மேலும், பலியானவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். வருகிற நவம்பர் 6ந் தேதி நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் அவர் ஏற்கனவே இப்பகுதியில் நாளை (திங்கட்கிழமை) தேர்தல் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். தற்போது அந்த திட்டத்தில் மாற்றம் செய்து இன்று கொலோரடோ செல்கிறார். அங்கிருந்து சான் பிரான்சிஸ்கோ செல்லும் அவர் நாளை நிவாடா மற்றும் கலிபோர்னியா புறப்படுகிறார். அரிசோனோ, கொலோரடா துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து தனி நபர் துப்பாக்கி வைத்திருக்கும் சட்டம் கடுமையாக்கப்பட உள்ளது. அதற்கான சட்ட திருத்தம் விரைவில் கொண்டு வரப்பட உள்ளது. |
||
![]() |
||
மற்றவை : |
||
|
|
||























