புதுவையில் ஜனாதிபதி தேர்தல் |
||
. |
||
Thursday, 19 July, 2012 02:40 PM
|
||
| . | ||
புதுச்சேரி, ஜூலை 19:இந்தியாவின் 14வது ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் 45 நிமிடத்தில் முடிவுற்றது. |
||
| . | ||
14வது ஜனாதிபதி தேர்தலுக்கு புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இன்று காலை 10.40மணிக்கு அதிமுக எம்எல்எ ஓம்சக்தி சேகர் தனது முதல் வாக்கை பதிவுசெய்தார்.இதையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், புருஷோத்தமன், பெரியசாமி, பாஸ்கர் ஆகியோர் வரிசையாக வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். 10.50மணிக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தனது ஓட்டை பதிவு செய்தார். அதையடுத்து அமைச்சர்கள் சந்திரகாசு, ராஜவேல், பன்னீர் செல்வம், தியாகராஜன், சபாநாயகர் சபாபதி, துணை சபாநாயகர் பி.டி. செல்வம் மற்றும் என். ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ,எதிர்க்கட்சித்தலைவர் வைத்திலிங்கம், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் , திமுக எம்எல்ஏக்கள் நாசிம் , நந்தா சரவணன், ஆகியோரும் தங்களது ஓட்டுக்களை பதிவு செய்தனர். கடைசியாக சரியாக 11.25மணிக்கு பூத் ஏஜெண்ட் வல்சராஜ் தனது ஓட்டை பதிவு செய்தார். 45 நிடங்களில் 30 எம்எல்ஏக்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். பின்னர் வாக்குப்பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுக்காப்புடன் சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. |
||
![]() |
||
மற்றவை : |
||
|
|
||























