170 வருட சிறைத் தண்டனை |
||
. |
||
Thursday, 12 July, 2012 01:40 PM
|
||
| . | ||
காட்மாண்டு, ஜூலை 12:பள்ளி சிறுமிகளை கடத்திச் சென்று இந்தியாவில் உள்ள விபச்சார கும்பலிடம் விற்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட நேபாளத்தைச் சேர்ந்த தமாங் என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று 170 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியிருக்கிறது. |
||
| . | ||
அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவதற்காக 13 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. நேபாள நாட்டின் வரலாற்றில் மிக அதிகபட்சமாக விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனை இதுவாகும். நேபாள் நாட்டில் சிதுபால் சவுக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பசீர் சிங் தமாங் (வயது 37). கடந்த 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுக்கு உட்பட காலத்தில் நேபாளத்தை சேர்ந்த 14 முதல் 17 வயது சிறுமிகளை இவர் கடத்திச் சென்று இந்தியாவில் உள்ள விபச்சார கும்பலிடம் விற்றதாக கூறப்படுகிறது. பள்ளிகளில் படித்த 6 மாணவிகளை நைசாக பேசி தங்கள் வலையில் விழ வைத்து, அந்த சிறுமிகளை பெருந்தொகைக்கு விற்றதாக கூறப்படுகிறது. விபச்சார கும்பலில் இருந்து அந்த சிறுமிகள் தப்பித்து ஓடி வந்து தமாங் மீது புகார் செய்தனர். இந்த புகார்கள் மீது விசாரணை நடைபெற்றது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்பாவி சிறுமிகளை கடத்திச் சென்று விபச்சார கும்பலிடம் விற்ற கொடிய குற்றத்திற்காக 170 வருட சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் 2 பேரில் ஒருவருக்கு 16 ஆண்டு சிறைத்தண்டனையும், மற்றொருவருக்கு 121/2 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். மேலும் தமாங்கிற்கு 13 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார். பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1.5 லட்சம் வீதம் நஷ்ட ஈடாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். |
||
![]() |
||
மற்றவை : |
||
|
|
||























