Advertisements




 
 
 
 
 
 

பல்பொருள் அங்காடியில் தீ

.

Monday, 09 July, 2012   12:15 PM
.
சென்னை, ஜூலை 9: சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத் தில் உள்ள பல்பொருள் அங்காடியில்  அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில்   பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் அன்னை இந்திரா நகரைச் சேர்ந்தவர் சேகர். இவர் ஒக்கியம் துரைப்பாக்கத் தில் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். இதில் 15க்கும் மேற்பட் டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் அங்காடி அருகே  தங்கியுள்ளனர்.

இன்று அதிகாலை 4.30 மணியள வில் அங்காடியில் இருந்து புகை வருவதாக இரவுக்காவலர் மணி (வயது 65), கடையில் பணியாற்றும் ஊழியர்களிடம் தெரிவித்தனர். அப்போது விரைந்து வந்த ஊழியர் கள்  கடையில் பற்றிய தீயை  அணைக்க  முயன்றனர். ஆனால் தீ கடை முழுவதும் பரவியதால் அவர்களால் அணைக்க முடியவில்லை. இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த திருவான்மியூர், கிண்டி, சாஸ்திரி பவன், தேனாம் பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து  4 வண்டிகளில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் 5 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர். மேலும் தீ அருகில் உள்ள கடை களுக்கு பரவாமல் தடுக்க தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் பல்பொருள் அங்காடியில் இருந்து அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என தெரிகிறது. இது குறித்து கண்ணகி நகர் ஆய்வாளர் கஜபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். முதல்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
| |

மற்றவை :