ஆஸி.அருகே கடலில்மூழ்கி படகு |
||
. |
||
Wednesday, 27 June, 2012 02:52 PM
|
||
| . | ||
கேன்பெர்ரா, ஜூன் 27:ஆஸ்திரேலியா அருகே நடுக்கடலில் அகதிகள் பயணம் செய்த படகு மூழ்கியது. அந்த படகில் பயணம் செய்த 150 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது. |
||
| . | ||
இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பெரும்பாலானோர் ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக வந்து தஞ்சம் அடைகின்றனர்.இந்த நிலையில் இந்திய பெருங்கடலில் ஒரு அகதிகள் படகு பயணம் செய்து கொண்டிருந்தது. அதில் சுமார் 150க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். இந்தோனேசியாவுக்கும், ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவுக்கும் இடையே வந்தபோது அந்த படகு கடலில் மூழ்கியது. இதனால் அதில் பயணம் செய்தவர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். தகவல் அறிந்ததும் ஆஸ்திரேலியாவின் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். இவை தவிர 2 சரக்கு கப்பல்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இருந்தும் படகில் பயணம் செய்த 150 பேர் கதி என்ன என்று தெரியவில்லை. ஆனால், பெரும்பாலான பயணிகள் மீட்கப்பட்டதாக மீட்பு குழுவினர் செய்தி தொடர்பாளர் ஜோமீகன் தெரிவித்துள்ளார். அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றியதே படகு மூழ்க காரணம் என்றும் அவர் கூறினார். கடலில் மூழ்கிய படகில் பயணம் செய்தவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என தெரியவில்லை.கடந்த வாரம் இதே பகுதியில் 200 பேர் வந்த ஒரு அகதிகள் படகு மூழ்கியது. அதில் 90 பேர் உயிரிழந்தனர். |
||
![]() |
||
மற்றவை : |
||
|
|
||























