Advertisements




 
 
 
 
 
 

எஸ்.ஐ. குடும்பத்திற்கு நிதி

.

Wednesday, 23 May, 2012   02:57 PM
.
சென்னை, மே 23:பணியில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த மற்றும் சாலை விபத்தில் பலியான  உதவி ஆய்வாளகள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:சென்னை பெருநகர காவல், பி4 உயர்நீதிமன்ற காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணி புரிந்து வந்த சு.சம்பந்தம் கடந்த 20ந் தேதி பணியில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியையும், டி8 முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணி புரிந்து வந்த சம்பத்குமார் கடந்த 22ந் தேதி திருமுல்லைவாயல்  
சோழம்பேடு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிக்க துயரம் அடைந்தேன்.

அவர்களது குடும்பங்களுக்கு முதல்அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல, காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாலை விபத்தில் பலியான ஆனந்தவள்ளி குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கவும், காயமøடைந்து சிகிச்சை பெற்று வரும் அவரது கணவர் பாலாஜிக்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
| |

மற்றவை :