.
 
 
 
 
 
 

ஒடிசா எம்எல்ஏ நாளை விடுதலை

.

Wednesday, 25 April, 2012   03:20 PM
.
புவனேஸ்வர், ஏப்.25:மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்ட ஒடிசா ஆளுங்கட்சி எம்எல்ஏ ஜீனா ஹிக்ஹா நாளை விடுதலை செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மக்கள் மன்றம் விடுதலை செய்து தீர்ப்பு அளித்ததை தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்படுவதாக மாவோயிஸ்ட்களின் ஆதரவாளர்களான வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.
.
ஒடிசா ஆளுங்கட்சி எம்எல்ஏ ஜீனா ஹிக்ஹா கடந்த மார்ச் 24ந் தேதி கொரபுட் என்ற இடத்தில் இருந்து மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்டார். அவரை விடுதலை செய்வதற்கு மாவோயிஸ்ட்கள் சில நிபந்தனைகளை விதித்திருந்தார்கள். ஆனால் அந்த நிபந்தனைகளை ஒடிசா அரசு நிறைவேற்றவில்லை. இதனிடையே அவரை விடுதலை செய்வதற்கு முயற்சிகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வந்தது.

இதனிடையே ஒடிசா எம்எல்ஏ ஜீனா ஹிக்ஹா மாவோயிஸ்ட்களின் மக்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் லஷ்மிபூர் சட்டமன்ற உறுப்பினர் ஜீனா ஹிக்ஹாவை விடுதலை செய்ய தீர்மானித்தது.

இந்த தகவலை ஆந்திராஒடிசா எல்லைப் பகுதியில் உள்ள மாவோயிஸ்ட்களின் மூத்த தலைவர் ஒருவர் தம்மிடம் தெரிவித்ததாக கொரபுட் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் நிஹார் ரஞ்சன் பட்நாயக் தெரிவித்தார்.ஜீனா ஹிக்ஹா நாளை விடுதலை செய்யப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார். நாராயண் பட்னா பகுதியில் உள்ள பாலிபெட்டா என்ற இடத்தில் அவர் விடுதலை செய்யப்படுவார் என்றும் அந்த வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஜீனா ஹிக்ஹா விடுதலைக்கு மாநில அரசோ மற்ற சட்டமன்ற உறுப்பினர்களோ உதவிக்கு வரவில்லை. மாறாக ஆதிவாசிகள்தான் அவரை விடுவிக்க முயற்சிகளை மேற்கொண்டார்கள் என்றும் மக்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

மாவோயிஸ்ட்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற சட்டமன்ற உறுப்பினர் ஜீனா ஹிக்ஹா எழுத்துபூர்வமாக உறுதி அளித்திருப்பதாகவும், அவற்றை நிறைவேற்ற தவறினால் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அந்த கடிதத்தில் கூறியிருப்பதாக மாவோயிஸ்ட்கள் தெரிவித்துள்ளனர்.இதனிடையே மாவோயிஸ்ட்கள் கேட்டுக் கொண்டபடி 29 மாவோயிஸ்ட் கைதிகளில் 25 பேர்களை விடுதலை செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
| |

?????? :