மு.தம்பித்துரை எம்.பி. எச்சரிக்கை |
||
. |
||
Monday, 09 April, 2012 04:06 PM
|
||
| . | ||
சென்னை, ஏப்.9:சென்னை ஏர்போர்ட்டில் தற்போது நடைமுறைப்படுத்தி உள்ள வாகன கட்டண முறையால் விமான பயணிகள் கடும் அவதிப்பட்டு வருவது குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் என்று விமான நிலைய அதிகாரிகளிடம் மு.தம்பித்துரை எம்.பி. எச்சரிக்கை விடுத்தார். |
||
| . | ||
சென்னை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை முறைப்படுத்துவதற்காக புதிய தட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி பயணிகளை இறக்கி விடவோ அல்லது ஏற்றிச் செல்வதற்கோ வரும் வாகனங்கள் உள்ளே நுழையும் போது ஒரு ஸ்லிப் கொடுக்கப்படும். அதில் அந்த வாகனம் உள்ளே செல்லும் நேரம் குறிக்கப்பட்டிருக்கும். ஐந்து நிமிட நேரத்திற்குள் பயணிகளை இறக்கி விட்டோ அல்லது ஏற்றிக் கொண்டோ அந்த வாகனம் வெளியே வந்து விட வேண்டும். ஐந்து நிமிடத்திற்கு மேல் தாமதமானால் 60 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்று புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கும், கட்டணம் வசூலிப்பவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு காரசார வாக்குவாதம் நடைபெற்று வருவதை காண முடிகிறது. இந்நிலையில் இன்று காலையில் அதிமுக எம்பி மு.தம்பித்துரை புதுடெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு காரில் வந்தார். அப்போது விஐபிக்கள் கார் நிறுத்தம் பகுதியில் அதிகமான கார் நின்றதால் மற்ற பயணிகள் இறங்கும் இடத்தில் தம்பித்துரை கார் நின்றது. அப்போது அங்கு வந்த பணியாளர் ஒருவர் தம்பித்துரை கார் டிரைவரிடம் உங்கள் கார் விமான நிலையத்திற்குள் வந்து 5 நிமிடத்திற்கு மேல் ஆகிவிட்டது. அதனால் ரூ.60 கட்ட வேண்டும் என்று கூறினாராம். அப்போது தம்பித்துரை எம்பி, நேராக விமான நிலைய மேலாளர்கள் பிரபு, நளினி ஆகியோரிடம் சென்று காரை விட்டு இறங்குவதற்குள் ரூ.60 கட்ட வேண்டும் என்று பயணிகளிடம் கேட்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். அப்போது மேலாளர்கள் கூறிய பதில் திருப்தி அளிக்காததால், சென்னை விமான நிலையத்தில் புதியதாக வசூலிக்கும் வாகன கட்டண முறையால் பயணிகள் அவதிப்படுவது குறித்தும், வாகன பார்க்கிங் என்ற பெயரில் முறைகேடு நடப்பது பற்றியும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் என்றுதம்பித்துரை கூறினார். அப்போது விமான நிலையத்தில் இருந்த மற்ற பயணிகளும் இது பற்றி தம்பித்துரையிடம் முறையிட்டனர். |
||
![]() |
||
மற்றவை : |
||
|
|
||























