ஒரே குடும்பத்தில் 6 பேர் சாவு |
||
. |
||
Saturday, 31 March, 2012 02:26 PM
|
||
| . | ||
கடப்பா, மார்ச் 31:ஆந்திர மாநிலம் கடப்பாவில் நிலத் தகராறு காரணமாக தனது குடும்பத்தினர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொளுத்தியதுடன் தானும் தீக்குளித்து உயிரிழந்திருக்கிறார். |
||
| . | ||
கடப்பா மாவட்டம் ராய்சோட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாஷா. இவரது மனைவி பெயர் மும்தாஜ் (வயது 35). தாய் ராஜீயா பீவி (வயது 60). மகள் தாஜ் ஹசீனா (வயது 8).இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள். பாஷாவின் மைத்துனி அமுரூன் பீவிக்கும், பாஷாவின் குடும்பத்தினருக்கும் இடையே நிலத்தகராறு பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த பாஷா தனது மனைவி, தாய், மகள் மற்றும் இருவர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்திருக்கிறார். தன் மீதும் மண்ணெண்ணெயை ஊற்றி கொண்டு நெருப்பை பற்ற வைத்திருக்கிறார். அவர்கள் உடலில் தீப்பிடித்து எரிந்தது. அனைவரும் துடிதுடித்தனர். அவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். மனைவி, தாய் மற்றும் மகள் ஆகியோர் மருத்துவமனையில் நேற்றிரவு உயிரிழந்தார்கள். பாஷா சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை மரணமடைந்தார். சுமன் மற்றும் ஒருவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினார்கள். அவர்கள் உயிரிழந்தனர். |
||
![]() |
||
மற்றவை : |
||
|
|
||























