.
 
 
 
 
 
 

புதுவை பட்ஜெட் கூட்டதொடர்

.

Wednesday, 28 March, 2012   03:42 PM
.
புதுச்÷ரி, மார்ச்.28:புதுச்சேரி மாநில அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கவர்னர் இக்பால்சிங் உரையுடன் துவங்கியதும் காங்கிரஸ், திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் கோஷமிட்டதால் சட்டசபையில் இருந்து அனைவரும் சபை காவலர்களால் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். 
.
புதுச்சேரி மாநில அரசின் 201213ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் கவர்னர் இக்பால்சிங் உரையுடன் இன்று துவங்கும் என்று சட்டசபை செயலாளர் அன்பழகன் அறிவித்து இருந்தார்.

அதன்படி புதுச்சேரி மாநில அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை துவங்கியது. கவர்னர் இக்பால் சிங் காலை 9.55 மணியளவில் புதுச்சேரி சட்டசபைக்கு வருகை தந்தார். அவருக்கு காவல்துறையின் அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இதையடுத்து சபாநாயகர் சபாபதி, செயலாளர் அன்பழகன் ஆகியோர் கவர்னரை சட்டசபைக்குள் அழைத்த சென்றனர். அப்போது எதிர்கட்சித் தலைவர் வைத்திலிங்கம், காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்கள் வல்சராஜ், நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனி ஜெயக்குமார், திருமுருகன், மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் திமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் நாஜிம், நந்தா சரவணன் ஆகியோர் கவர்னரை வழிமறித்து, முதல்வர் ரெங்கசாமி அறிவித்த எந்த திட்டமும் செயல்படுத்தப் படவில்லை என்றும், தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் முறைகேடு நடந்து இருப்பதால் பட்ஜெட் கூட்டத்தில் உரையாற்றாமல் திரும்பி செல்லும் படி கோஷமிட்டனர்.

இதையடுத்து கவர்னர் இக்பால்சிங்கை போலீசார் பாதுகாப்பாக சட்ட சபைக்குள் அழைத்து சென்றனர். தொடர்ந்து காலை 10 மணியளவில் கவர்னர் இக்பால்சிங் உரையாற்ற துவங்கியதும், அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், ஓம்சக்தி சேகர், புருஷோத்தமன், பெரியசாமி, பாஸ்கர் ஆகியோர் எழுந்து கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை என்று கோஷம் எழுப்பினர்.

உடனே சபாநாயகர் சபாபதி அதிமுக எம்எல்ஏக்களை சபையில் இருந்து வெளியேற உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சபாநாயகர் இருக்கை முன்பு சென்று கோஷம் எழுப்பினர். அப்போது காங்கிரஸ் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சபாநாயகர் இருக்கை முன்பு சென்று கோஷம் எழுப்பினர்.

இதனால் சபையில் கூச்சல், குழப்பம் நிலவியது. இதையடுத்து எதிர்கட்சி எம்எல்ஏக்கள் அனைவரையும் சபையில் இருந்து வெளியேற்றும் படி சபாநாயகர் உத்தரவிட்டதையடுத்து சபை காவலர்கள் கோஷமிட்ட எதிர் கட்சி எம்எல்ஏக்களை அவையில் இருந்து வெளியேற்றினார்கள். பின்னர் சபைக்கு வெளியே வந்த எதிர்கட்சி எம்எல்ஏக்கள் சட்டசபை முன்பு முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக கோஷமிட்டனர். 
| |

?????? :