.
 
 
 
 
 
 

இந்திய வாலிபர் சாதனை

.

Wednesday, 28 March, 2012   03:33 PM
.
யூனோஸ் ஏரிஸ், மார்ச் 28: உலகின் நீண்ட மலைத்தொடரான ஆண்டிஸ் மலைத்தொடரில் ஏறி இந்திய வாலிபர் சாதனை புரிந்துள்ளார்.
.
ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த மல்லி மஸ்தான் பாபு. மலையேறுவதில் பயிற்சி பெற்ற இவர் ஆண்டிஸ் மலைத் தொடரை ஏறி சாதனை செய்துள்ளார். ஆண்டிஸ் மலைத்தொடரின் உச்சியை தொட்ட முதல் இந்தியர் என்ற பெருமையை மல்லி மஸ்தான் பாபு பெறுகிறார்.

இதுமட்டுமல்லாது, இவர் 172 நாட்களில் 7 மலை உச்சிகளை அடைந்ததன் மூலம் கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் தனது பெயரை பதிவு செய்துள்ளார். விவசாய குடும்பத்தை சேர்ந்த மல்லி மஸ்தான் பாபு, இமாலய மலைத்தொடரான 6,962 அடி உயர அக்கோன்காகுவா மலைச் சிகரத்தை 3 முறையும், பெரு நாட்டிலுள்ள ஹூயாஸ்கரன் மலைத்தொடர் (6,768 மீட்டர்), பொலிவியா நாட்டிலுள்ள சஜாமா மலைத்தொடர் (6,542 மீட்டர்), ஈக்வடார் நாட்டிலுள்ள சிம்பரோஜோ மலைத்தொடர் (6,310 மீட்டர்) மற்றும் சிலி நாட்டிலுள்ள ஓஜோஸ் டெல் சலாடோ மலைத்தொடர் (6,800 மீட்டர்) உள்ளிட்ட மலைத்தொடர்களில் இவர் ஏறி சாதனை படைத்துள்ளார்.
| |

?????? :