.
 
 
 
 
 
 

எகிப்தில் சிறுவன் பலி

.

Sunday, 25 March, 2012   04:08 PM
.
கெய்ரோ, மார்ச்.25:எகிப்து தலைநகர் கெய்ரோவில் கடந்த மாதம் (பிப்ரவரி) 1ந்தேதி கால்பந்து போட்டி நடந்தது. அப்போது ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டு அது கலவரமாக மாறியது. அதில் 74 பேர் கொல்லப்பட்டனர்.
.
   இந்த கலவரத்துக்கு காரணமாக ஆப்பிரிக்கா கண்டத்தின் மிகப்பெரிய கால்பந்து அணியான மாஸ்ரி கிளப் 2 ஆண்டுகள் விளையாட கூடாது என எகிப்து கால்பந்து கழகம் தடை விதித்தது. இதற்கு எகிப்து ரசிகர்கள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் எகிப்தில் போர்ட்சேட் மைதானத்தில் கால்பந்து போட்டி நடந்தது. அந்த போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். அப்போது கால்பந்து ரசிகர்கள் சிலர் கலவரத்தில் ஈடுபட்டனர்.  இதில் சிறுவன் ஒருவன் பலியானான்.
| |

?????? :