.
 
 
 
 
 
 

பிரதமர் வெளிநாடு பயணம்

.

Saturday, 24 March, 2012   03:05 PM
.
புதுடெல்லி, மார்ச் 24: நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக, பிரதமர் மன்மோகன் சிங், இன்று தென்கொரியாவுக்கு புறப்பட்டுச் சென்றார். பிரதமர் மன்மோகன் சிங், தென்கொரியாவில் நான்கு நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
.
இதற்காக, இன்று அவர் டில்லியில் இருந்து, சியோலுக்கு விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். இரு நாடுகளுக்கும் இடையேயான பரஸ்பர நட்புணர்வை பலப்படுத்துவதற்கும், வர்த்தக ரீதியான ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கும், பிரதமரின் சுற்றுப் பயணத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தன் சுற்றுப் பயணத்தின் போது, தென்கொரிய அதிபர் லீ மியுங்பக்கையும், பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசுகிறார். தென் கொரிய தொழிலதிபர்களையும் சந்திக்க உள்ளார்.

அணு சக்தி பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் பங்கேற்கவுள்ள உலக நாடுகளின் தலைவர்களுக்காக, சியோலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விருந்திலும், மன்மோகன் சிங் பங்கேற்கவுள்ளார்.

அணு ஆயுதத்தால் ஏற்பட்டுள்ள சவால்களை சந்திப்பதற்கான மாநாடு சியோலில் நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷிய அதிபர் மெத்தேதேவ், சீன அதிபர் ஹூ ஜினாட்டோவ் உள்பட  57 நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். அணு ஆயுதமற்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பது இந்தியாவின் நிலை என்று பிரதமர் மன்மோகன்சிங் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 
| |

?????? :