.
 
 
 
 
 
 

பிலிப்பைன்ஸ்-ல் நிலநடுக்கம்

.

Sunday, 18 March, 2012   03:17 PM
.
மணிலா, மார்ச் 18:பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று மாலை 4 மணி அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால் தெற்கு பகுதியில் உள்ள சூரியாகோ, மிடானோவா ஆகிய நகரங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.
.
இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினார்கள். ரோடுகளில் தஞ்சம் புகுந்தனர். மேலும், கடைகள், வர்த்தக நிறுவனங்களுக்கு சென்றிருந்த மக்களும், ஊழியர்களும் அங்கிருந்து வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர்.

இந்த நிலநடுக்கம் காரணமாக சூரியாகோ நகரில் பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்தன. அங்குள்ள ஒரு பெரிய வணிக வளாகம் இடிந்து நொறுங்கியது. அப்போது அங்கு ஏராளமான மக்கள் இருந்தனர். அவர்களில் பலர் காயம் அடைந்தனர். வணிகவளாகம் ஊழியர்களுக்கும் காயம் ஏற்பட்டது.

எனவே, பீதியில் ஏராளமான மக்கள் ரோடுகளில் ஓடினார்கள். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதில், சிக்கியும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியும் 45 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும், சூரியாகோ, மிடானோவில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, இந்த நிலநடுக்கம் 5.9 ரிக்டர் அளவில் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. டினாகட் தீவுகளின் தெற்கு பகுதியில் பூமிக்கு அடியில் 16 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் காரணமாக ஏற்பட்ட சாவு விவரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. மேலும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. இந்த நிலநடுக்கம் பிலிப்பைன்சின் அண்டை நாடுகளான பியர்மோரியோ, மொமின்கள் குடியரசு நாடுகளிலும் லேசாக உணரப்பட்டது. அங்கு 3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.
| |

?????? :