கின்னஸ் சாதனை தோசை |
||
. |
||
Monday, 20 February, 2012 03:28 PM
|
||
| . | ||
மதுரை, பிப்.20: மதுரையில் நடைபெற்ற கண்காட்சி ஒன்றில், 48 அடி நீள தோசையை உருவாக்கி கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. |
||
| . | ||
பிரபல சமையல் கலை நிபுணர் தாமோதரன் தலைமையில் 20 தோசை மாஸ்டர்கள் சேர்ந்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இதன்மூலம், விஜயவாடா ஹோட்டல் அசோசியேசன் சார்பில் நிகழ்த்திய 38.2 அடி நீள தோசை கின்னஸ் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. மதுரை தமுக்கம் மைதானத்தில் மதுரை ரவுண்டு டேபிள் அமைப்பின் சார்பில் நடைபெற்ற உணவுத் திருவிழாவை தொடர்ந்து இந்த சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த புதிய கின்னஸ் சாதனைக்கு முழு ஓத்துழைப்பு அளித்த 20 தோசை மாஸ்டர்கள் மற்றும் மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொளவதாக சாதனை நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சமையற்கலைஞர் தாமோதரன் தெரிவித்துள்ளார். இக்கண்காட்சியின் மூலம் கிடைக்கும் பணம், அரசுப் பள்ளிகள் மற்றும் அனாதை இல்லங்களில் படித்து வரும் குழந்தைகளில் கல்விக்காக பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த 48 அடி நீள தோசையை சுடுவதற்கு வசதியாக சென்னையிலிருந்து 20 அடி நீள 3 தோசைக் கற்கள் கொண்டுவரப்பட்டன. 1500 கிலோ மாவு பயன்படுத்தப்பட்டது. |
||
![]() |
||
மற்றவை : |
||
|
|
||























