.
 
 
 
 
 
 

இந்தியாவுக்கானதூதர் நான்சி

.

Sunday, 18 December, 2011   02:48 PM
.
வாஷிங்டன், டிச.17:இந்தியாவுக்கான  அமெரிக்க தூதராக நான்சி ஜே பவல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்குநியமிக்கப்பட்டுள்ள பெண் தூதர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இருந்த திமோதி ஜே ரோமர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.அதனைத் தொடர்ந்து இந்த பதவி காலியாக இருந்தது.  தற்போது நான்சி ஜே பவல் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

பாகிஸ்தான், நேபாள் ஆகிய நாடுகளில் தூதராக பணியாற்றி இருக்கிறார். முன்னதாக கொல்கத்தா, புதுடெல்லி போன்ற இடங்களில் தூதராக அதிகாரியாக பணியாற்றி இருக்கிறார். ஆசியாவில் நீண்ட அனுபவம் உள்ள நான்சி ஜே பவல்  இந்தியாவுக்கான தூதராக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட அனுபவமும், அர்ப்பணிப்பும் உள்ள நான்சி ஜே பவலை இந்தியாவுக்கான தூதராக நியமிப்பதாக அந்நாட்டு அதிபர் ஒபாமா கூறியிருக்கிறார்.
| |

?????? :