Advertisements




 
 
 
 
 
 

டிராக்டர் மோதி சிறுமி பலி

.

Sunday, 11 December, 2011   02:12 PM
.
சிதம்பரம், டிச.11:சிதம்பரம் அருகே டிராக்டர் மோதி 6 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
.
சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி தெற்கு திட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன் (வயது 50). இவரது மகள் விஜயபிரியா (வயது 6). விஜயபிரியா தனது வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்தார்.

அப்போது அப்பகுதியில் வேகமாக வந்த டிராக்டர் ஒன்று விளையாடிக் கொண்டிருந்த விஜயபிரியா மீது மோதியது. இதில் சிறுமி விஜயபிரியா தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து புவனகிரி காவல் நிலையத்தில் நாகராஜன் புகார் கூறியதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவர் கதிரேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
| |

மற்றவை :