.
 
 
 
 
 
 

புதின் கட்சிக்கு பின்னடைவு

.

Monday, 05 December, 2011   02:58 PM
.
மாஸ்கோ,  டிச.5:ரஷ்ய நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் விளாடிமிர் புதினின் ஐக்கிய ரஷ்ய கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. 
.
அக்கட்சி பெரும்பான்மை பலத்தை இழந்தது.ரஷ்யாவில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான ஐக்கிய ரஷ்ய கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, லிபரல் டெமாக்கிரிடிக் கட்சி ஆகியவை போட்டியிட்டன.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 88 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் ஆளும் கட்சியான ஐக்கிய ரஷ்ய கட்சி 50.2 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சி 19.12 சதவீத வாக்குகளையும், லிபரல் டெமாக்கிரிடிக் கட்சி 13 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. பிரதமர் விளாடிமிர் புதினின் கட்சியான ஐக்கிய ரஷ்ய கட்சி 50 சதவீத வாக்குகளுக்கு மேல் பெற்று முதலிடத்தை பெற்றாலும் அந்த கட்சி பெரும்பான்மையை இழந்து பின்னடைவை சந்தித்துள்ளது.

கடந்த தேர்தலில் அக்கட்சி 64 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பிரதமர் புதின் மார்ச் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். அவருடைய செல்வாக்குக்கான பரிசோதனையாக நாடாளுமன்ற தேர்தல் அமையும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் புதினின் கட்சி இந்த தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளது.
| |

?????? :