.
 
 
 
 
 
 

விசாரணைக்கு முபாரக் ஆஜர்

.

Thursday, 04 August, 2011   03:37 PM
.
கெய்ரோ, ஆக.4:எகிப்து அதிபர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட ஹோஸ்னி முபாரக் மீதான ஊழல் மற்றும் கிளர்ச்சியாளர்களை கொலை செய் தது ஆகிய குற்றச்சாட்டுகள் குறித்த நீதிமன்ற விசாரணை நேற்று நடைபெற்றது.
.
எகிப்தில் நீண்ட காலம் அதிபர் பதவியில் இருந்த ஹோஸ்னி முபாரக் குக்கு எதிராக அந்நாட்டு  மக்கள் மேற்கொண்ட கிளர்ச்சியை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் அவர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். அது முதல் வெளி உலகிற்கு தெரியாமல் இருந்த புற்று நோயாளியான அவர், ஷார்ம் எல்ஷேக் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக அவர் மீதான விசாரணை தள்ளிப்போகலாம் என்று செய்திகள் வெளியாகின. அவர் மீது ஊழல் மற்றும் கிளர்ச்சி யாளர்களை கொலை செய்தது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன.

இது தொடர்பான விசாரணைக்கு நேற்று அவர் ஆஜரானார். கெய்ரோ வில் உள்ள நீதிமன்றத்திற்கு ஹெலி காப்டர் மூலம் அவர் வந்தார். நீதிமன்  றத்திற்கு வெளியே கூட்டம் கூடியி ருந்தது. அவர் வந்தபோது கிரிமினல் வருகிறார் என்று அங்கிருந்த அவரது எதிர்ப்பாளர்கள் கோஷம் எழுப்பி னார்கள். அதே சமயம் அங்கிருந்த அவரது ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பினார்கள்.

இதுபோன்ற மாறுபட்ட உணர்வு களுடன் கூட்டத்தினர் அங்கே கூடி யிருக்க நீதிமன்றத்தில் ஹோஸ்னி முபாரக் ஆஜராகி விசாரணையை எதிர்கொண்டார். மிகவும் சோர்வாக காணப்பட்ட முபாரக் குற்றவாளிக் கூண்டில் உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தார். அவரது இரு புறத்திலும் அவரது இரு மகன்களும் ஆஜரானார்கள். அவர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன. அவர் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.

30 ஆண்டு காலமாக தனது அரசியல் எதிரிகளை எல்லாம் ஒடுக்கிய முபாரக் நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொண்டது எகிப்து வரலாற்றில் குறிப்பிடத்தக்க சம்பவமாக கருதப் படுகிறது. முபாரக்  மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு மரண தண்டனை வரை விதிக்கப்படலாம் என கூறப் படுகிறது.

முபாரக் மீதான விசாரணையை பார்ப்பதற்கு அனுமதி பெற்ற 600 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப் பட்டது. அத்துடன் சிவில் உரிமை வழக்கறிஞர்களும், குற்றம்சாட்டப் பட்டவர்களின் குடும்பத்தினரும், முபாரக்கால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் விசாரணையைக் காண அனுமதிக்கப்பட்டனர்.முபாரக் மீதான விசாரணையை யொட்டி நீதிமன்றம் அமைந்துள்ள போலீஸ் அகாடமி வளாகத்தில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டு இருந்தது.
| |

?????? :