.
 
 
 
 
 
 

பாக்.மந்திரி ராஜஸ்தான் பயணம்

.

Thursday, 28 July, 2011   02:22 PM
.

புதுடெல்லி,  ஜூலை28:பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ரப்பானி கர் இன்று ராஜஸ்தானில் ஆஜ்மீரில் உள்ள புனித ஸ்தலத்துக்குச் சென்று தொழுகை செய்கிறார்.
.
பாகிஸ்தானின் முதல் பெண் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி கர் நேற்று முன்தினம் 2 நாள் பயணமாக இந்தியா வந்தார்.

டெல்லியில் நேற்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசினார். பின்னர் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து இரு நாடுகளிடையேயான பல்வேறு பிரச்சனைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இரு நாட்டு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தை முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இரு நாடுகளிடையே உள்ள விசா தொடர்பான உடன்பாட்டை மாற்றி அமைத்துக் கொள்ளவும், தீவிரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்த ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பது என்று முடிவு செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

டெல்லியில் உள்ள ஜும்மா மசூதிக்கு  செல்ல பாகிஸ்தான் அமைச்சர்  ரப்பானி கர் விருப்பம் தெரிவித்தார். ஆனால் பாதுகாப்பை கருதி அங்கே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவர் இன்று ராஜஸ்தானில் ஆஜ்மீரில் உள்ள புகழ் பெற்ற  புண்ணிய ஸ்தலத்துக்கு செல்கிறார். அங்கு வழிபாடு செய்து செய்து விட்டு பாகிஸ்தான் திரும்ப திட்டமிட்டு உள்ளார்.

இதற்காக இன்று காலை டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் புறப்பட்டார். அங்கிருந்து ஆஜ்மீரில் உள்ள இஸ்லாமிய மத குரு ஷபி  புண்ணிய ஸ்தலத்துக்குச் சென்று தொழுகை செய்கிறார். ஷபி கவாஜா மொய்னுதீன் 1192ல் பெர்சியாவில் இருந்து ஆஜ்மீருக்கு வந்தார். அங்கு தங்கியிருந்து போதனைகளை செய்தார். ஆயிரக்கணக்கான மக்கள் அவரது போதனையால் ஈர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| |

?????? :