வாலிபர் பரிதாப சாவு |
||
. |
||
Tuesday, 04 January, 2011 03:29 PM
|
||
| . | ||
காஞ்சிபுரம், ஜன. 4: காஞ்சிபுரம் அருகே வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். |
||
| . | ||
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபத்தில் உள்ள புத்தாகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 28). இவர் தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி கல்பனா. இவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் தன்னுடைய வீட்டிலிருந்து வழக்கம்போல பைக்கில் வேலைக்கு சென்றார் ஆனந்தன். காஞ்சிபுரம் அருகே ராஜகுளம் என்ற இடத்தில் சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த வேன் மோதியதில் ஆனந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அந்த வேனில் பயணம் செய்த கூலித் தொழிலாளர்கள் 8 பேரும் இந்த விபத்தில் காயமடைந்தனர். இது குறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனந்தன் மனைவி கல்பனாவுக்கு இன்னும் சில நாட்களில் சீமந்தம் நடைபெற உள்ள நிலையில் விபத்தில் ஆனந்தன் மரணமடைந்தது, அவரது குடும்பத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. |
||
![]() |
||
மற்றவை : |
||
|
|
||























