லக்வி பாக். உளவு தலைவர் சந்திப்பு |
||
. |
||
Monday, 23 August, 2010 11:57 AM
|
||
| . | ||
புதுடெல்லி, ஆக.23: பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பான லஷ்கர்இதொய்பாவின் தளபதி லக்வீயை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தலைவர் சந்தித்து பேசியதாக டேவிட் ஹெட்லி கூறியுள்ளான். |
||
| . | ||
மும்பை பயங்கரவாத தாக்குதல் சதிகாரனான டேவிட் ஹெட்லி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அவனிடம் அண்மையில் இந்தியா வின் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது லஷ்கர்இதொய்பா வின் ராணுவ கமாண்டர் ஜாகிர் ரகுமான் லக்வீயை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தலைவர் அகமது சுஜா பாஷா சந்தித்து பேசியதாக இந்திய அதிகாரிகளிடம் ஹெட்லி கூறியுள்ளான். இந்த சந்திப்பு ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் நடை பெற்றதாகவும் அவன் கூறியதாக இந்தியாவின் பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் அரசுக்கும், ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கும் லஷ்கர் இதொய்பா பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்பு இருப்பது மீண்டும் அம்பலமாகியுள்ளது. லஷ்கர்இதொய்பாவின் நிறுவனர் அபீஸ் சயீத்தின் அனுமதி பெற்ற பிறகே அதன் ராணுவ பிரிவு முக்கிய தாக்குதல்களை நடத்துவதாகவும் ஹெட்லி கூறியிருக்கிறான். மும்பை பயங்கரவாத தாக்குதல் குறித்து பல்வேறு தகவல்களை இந்திய அதிகாரிகளிடம் வெளியிட்ட ஹெட்லி, இதில் பாகிஸ்தான் அரசு மற்றும் ஐஎஸ்ஐ ஆகியவற்றுக்கு உள்ள தொடர்புகள் குறித்தும் விரிவாக கூறியிருக்கிறான். 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தாக்குதல்களை நடத்த லஷ்கர்இதொய்பாவுக்கு முதல் படகு வாங்க ரூ.25 லட்சத்தை ஐஎஸ்ஐ வழங்கி உள்ளது. ஆனால் அந்தப் படகு தாக்குதல் முயற்சி தோல்வி அடைந்ததால் அழிக்கப்பட்டது. மும்பை தாக்குதல்களுக்கு பிறகு லக்வி கைது செய்யப்பட்டு அடியாலா சிறையில் அடைக்கப்பட்டான். அவனை ஐஎஸ்ஐ தலைவர் சுஜா பாஷா, மும்பை தாக்குதல் சதி குறித்து பேசுவதற்காக சென்று சந்தித்த தாக ஹெட்லியை மேற்கோள்காட்டி தேசிய புலனாய்வு ஏஜென்சி அறிக்கை தெரிவித்துள்ளது. 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ந் தேதி பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக வந்த தீவிரவாதிகள் மும்பையில் நடத்திய தாக்குதலில் சுமார் 200 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு அனைத்து வகையான உதவிகளையும் பாகிஸ்தான் வழங்கியதாகவும் ஹெட்லி தெரிவித்து உள்ளான். |
||
![]() |
||
மற்றவை : |
||
|
|
||























