.
 
 
 
 
 
 

300 வீடுகள் புதைந்தன

.

Monday, 09 August, 2010   12:04 PM
.
பீஜிங், ஆக.9: சீனாவில் பலத்த மழை காரணமாக ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் ஆயிரக் கணக்கானோர் சிக்கித் தவிக்கிறார்கள். 300க்கும் மேற்பட்ட வீடுகள் சேறு சகதியில் புதைந்து விட்டன. மீட்பு பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது.
.
சீனாவின் வடமேற்கு பகுதியில் கன்சூக் மாகாணத்தில் திபெத்திய தன்னாட்சிப் பகுதிக்கு உட்பட்ட கன்னான் பகுதியில் கடந்த ஒரு வாரமாக வரலாறு காணாத பேய் மழை பெய்து வருகிறது. இதில் 127 பேர் பலியாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக கணக்கிடப்பட்டு இருக்கிறது. ஏராளமானோரை காணவில்லை.

இந்தப் பகுதியில் நேற்றும் பேய் மழை கொட்டித் தீர்த்தது. இது மலைப்பகுதி என்பதால்  ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகளை அமுக்கியது. இதில் ஏராளமான வீடுகள் புதையுண்டு இருப்ப தாக அஞ்சப்படுகிறது.  சம்பவ பகுதிக்கு சீனப்பிரதமர் வென் ஜியாபோ விரைந்துள்ளார். பேரிடர் துயர் துடைப்புக்கான தேசியக்குழு மீட்புப்பணியில்  மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் நிலச்சரிவை அகற்றி மக்களை  மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏயுவான் என்ற கிராமத்தில் 300 வீடுகள் சேறு சகதிக்கு புதையுண்டு விட்டன. இதில் ஏற்பட்ட சேதம் பற்றிய தகவல் இன்னும் தெரிய
வில்லை.

பைலாங் என்ற ஆறு நிலச்சரிவு காரணமாக தடுக்கப்பட்டு விட்டது. இதனால் ஆறு உடைப்பெடுத்து சென்குவான் என்ற சிறிய நகரத்துக்குள் வெள்ளம் சேறும் சகதியுமாக பாய்ந்துள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் சேறும் சகதியும் பரவி கிடப்பதால் போக்குவரத்து துண்டிக் கப்பட்டு உள்ளது. உயிர் தப்பிய  மக்கள் கட்டிடங்களின் உச்சியில்
தஞ்சம் புகுந்துள்ளனர்.

மீட்புப் பணியினரால் பாதிக்கப் பட்ட பகுதியை முழுமையாக நெருங்க முடியவில்லை. 23 பேரை காப்பாற்றி இருப்பதாகவும், 15 உடல்களை மீட்டு இருப்பதாகவும் மீட்பு குழுவினர் தெரிவித்தனர். நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 1294 பேரை காணவில்லை என்று சீன அரசு அறிவித்துள்ளது. ஆனாலும் 2000 பேருக்கு மேல் காணாமல் போயிருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. காயம் அடைந்த 117 பேரில் 29 பேரின் நிலைமை கவலைக்கிடமாக  உள்ளது.

இதற்கிடையில் சீன செய்தி ஏஜென்சி சின்குவா கடைசியாக  வெளியிட்ட தகவலில் இடிபாடுகளுக்கு இடையே இருந்து 1242 பேர் மீட்கப்பட்டு இருப்பதாக தெரிவிக் கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் களில் 45 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான  இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பதாக சீன மக்கள் குறை தீர்ப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
| |

?????? :