காமன்வெல்த் பாதுகாப்பு ஆய்வு |
|||
. |
|||
Thursday, 29 July, 2010 02:20 PM
|
|||
| . | |||
புதுடெல்லி, ஜூலை 29:காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை 31 நாடுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் இன்று ஆய்வு செய்கின்றனர். |
|||
| . | |||
புதுடெல்லியில் அக்டோபர் 3ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டியில் 71 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரம் வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். துவக்க விழா நிகழ்ச்சியில் 8 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்பதை ஏற்கனவே உறுதிபடுத்தி உள்ளனர். இந்நிலையில 31 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் இன்று காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் தொடர்பான பாதுகாப்பு ஏற்பõடுகளை ஆய்வு செய்ய உள்ளனர். போட்டிகளை முன்னிட்டு செய்யப் பட்டுள்ள நான்கு அடுக்கு பாதுகாப்பு, வாகன சோதனை போன்ற விஷயங்கள் குறித்து இந்திய அதிகாரிகள் அவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்க உள்ளனர். விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பது குறித்தும் அவர்கள் எடுத்துரைக்க உள்ளனர். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை யென்றாலும் முழு வீச்சிலான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. |
|||
![]() |
|||
மற்றவை : |
|||
|
|
|||























