கோவையில் டைடல் பார்க் |
||
. |
||
Wednesday, 28 July, 2010 11:06 AM
|
||
| . | ||
கோவை, ஜூலை 28:கோவையில் ரூ.380 கோடி மதிப்பிலான டைடல் பார்க்கை மு.க.ஸ்டாலின் வருகிற 2ந் தேதி திறந்து வைக்கவிருப்பதாக அமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார். |
||
| . | ||
கோவை அவினாசி ரோட்டில் அமைக்கப்பட்டு வரும் தகவல் தொழில் நுட்ப பூங்காவின் இறுதிகட்ட பணிகளை தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி ஆய்வு செய்த பின் கூறியதாவது: தமிழக முதலமைச்சரின் அறிவிப்பினையொட்டி கோவையில் ரூ.380 கோடி மதிப்பில் 9.5 ஏக்கர் பரப்பளவில் தகவல் தொழில் நுட்ப பூங்கா (டைடல் பார்க்) அமைக்கப்படுகிறது. இது மேல்பகுதியில் 5 தளங்கள், பூமிக்கடியில் 3 தளங்கள் அமைக்கப்பட்டு வங்கிகள், உணவுக் கூடம், புத்தகக் கடை, வீடியோ கான்பரன்சிங் அறை மற்றும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் என ஒதுக்கப்படும். இங்கு 24 மணி நேரமும் மின் சப்ளை, தண்ணீர், தீயணைப்பு, லிப்ட் போன்ற வசதிகள் மற்றும் தடையில்லா மின்சாரம் கிடைக்க 10 மெகாவாட் திறன் ஜெனரேட்டரும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி இந்த தகவல் தொழில் நுட்ப பூங்காவை திறந்து வைக்கிறார். இந்த பூங்கா மூலம் ஆயிரக்கணக்கான மென்பொருள் வல்லுநர்கள் நேரடியாக வேலைவாய்ப்பினை பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது கோவை கலெக்டர் பு.உமாநாத், செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், மக்கள் தொடர்பு அதிகாரி கண்ணதாசன் உட்பட அரசு அதிகாரிகள் உடன் இருந்தார்கள். |
||
![]() |
||
மற்றவை : |
||
|
|
||























