Advertisements




 
 
 
 
 
 

கூட்டத்தில் சிக்கிய கங்குலி

.

Monday, 26 July, 2010   03:39 PM
.
கொல்கத்தா, ஜூலை 26:கொல்கத்தா அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கும்பலுக்கு நடுவே முன்னாள் இந்திய கேப்டன் சவ்ரவ் கங்குலி சிக்கித் தவித்தார். பின்னர் அவர் கூட்டத்தினரை சமாதானம் செய்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
.
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் கங்குலி கொல்கத்தாவில் வசித்து வருகிறார். நேற்று அவர் தனது மகள் சானாவோடு தெற்கு கொல்கத்தா பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பெகலா சவ்ராஷ்டிரா எனும் பகுதியில் கும்பல் ஒன்று சாலை மறியலில் ஈடுபட்டிருந்தது.

கங்குலியின் காரை அந்த கும்பல் வழிமறித்தது. கங்குலி கார் டிரைவர் வேகமாக காரை ஓட்டிச் செல்ல முற்பட்டார். அப்போது அந்த கும்பல் கார் டிரைவரை அடிக்க பாய்ந்தது. இந்த நிலையில் கங்குலி காரிலிருந்து இறங்கி தனது டிரைவரை காப்பாற்றினார்.

பின்னர் அவர் மறியல் செய்தவர்களோடு சமாதான பேச்சில் ஈடுபட்டார். இதனையடுத்து அவரது கார் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டது. விபத்து ஒன்றில் வாலிபர் ஒருவர் பலியானது தொடர்பாக இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
| |

மற்றவை :