.
 
 
 
 
 
 

ஆக்டோபஸ் ஸ்பெயின் செல்கிறது

.

Thursday, 15 July, 2010   01:43 PM
.
மேட்ரிட், ஜூலை 15: உலகக்கோப்பையில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று துல்லியமாக கணித்து புகழ் பெற்ற ஆக்டோபஸ் பால் ஜெர்மனியில் இருந்து ஸ்பெயின் நாட்டுக்கு செல்லவுள்ளது.
.
ஸ்பெயின் நாட்டில் உள்ள நீர் அருங்காட்சியகத்தில் வளர்க்கப்பட்டு வரும் ஆக்டோபஸ் பால், உலகக்கோப்பை போட்டிகளின் கணிப்புகளை தந்து பரபரப்பை ஏற்படுத்தியது. அரையிறுதியில் ஜெர்மனி தோல்வியடையும் என்பதுஉட்பட இதன் கணிப்புகள் உண்மையாயின. மேலும் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியே வெல்லும் என்று ஆக்டோபஸ் கணித்தது. அதன்படி ஸ்பெயினும் கோப்பை வென்றது.

இதனால் உலகக்கோப்பையில் ஆக்டோபசுக்கு தனி மதிப்பு ஏற்பட்டது. உலகக்கோப்பைக்கு பிறகு ஆக்டோபசுக்கு ஜோதிடம் கூறுவதில் இருந்து ஓய்வு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த ஆக்டோபஸ் ஸ்பெயின் நாட்டுக்கு செல்லவுள்ளது. ஸ்பெயின் நாட்டில் உள்ள நீர் அருங்காட்சியகத்திற்கு இந்த ஆக்டோபஸ் அனுப்பப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு பதிலாக வேறு ஒரு விலங்கை ஸ்பெயின் ஜெர்மனிக்கு வழங்கவுள்ளது. மேலும் ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் வருடாந்திர ஆக்டோபஸ் திருவிழாவிற்கும் ஆக்டோபஸ் பாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த போட்டியை நடத்தும் நகரம் ஆக்டோபஸ் பாலுக்கு கவுரவ குடியுரிமை வழங்கி சிறப்பித்துள்ளது. ஆக்டோபஸ் பாலின் வருகை ஸ்பெயின் நாட்டு கால்பந்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
| |

?????? :