.
 
 
 
 
 
 

சீன விமானத்துக்கு மிரட்டல்

.

Thursday, 15 July, 2010   12:11 PM
.
பெய்ஜிங், ஜூலை 15: சீன விமானம் ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சீனாவின் தென் பகுதியில் உள்ள உரும்கி எனும் நகரிலிருந்து அந்த விமானம் சென்று கொண்டிருந்தது.
.
அப்போது விமானத்தில் வெடி குண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது. கட்டுப்பாட்டு அறையில் இருந்த காவலர்களுக்கு தொலைபேசி மூலம் இந்த மிரட்டல் வந்தது. இதனையடுத்து விமானம் அருகில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் 93 பயணிகள் இருந்தனர். அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் விசாரணையில் இது வெறும் மிரட்டல் என்று தெரிய வந்தது.
| |

?????? :