.
 
 
 
 
 
 

ஆக்டோபஸ் ஜோதிடம்

.

Wednesday, 07 July, 2010   02:48 PM
.
ஆக்டோபஸ் சொல்வதை நம்புவதாக இருந்தால் இன்று நடைபெறும் அரையிறுதியில் வெல்லப்போவது முன்னாள் சாம்பியன் ஜெர்மனி அல்ல ஸ்பெயின் அணிதான் என்று எதிர்பார்க்கலாம்.
.

கிளி ஜோதிடம், கைரேகை ஜோதிடம் என்று பலவிதமான ஜோதிடம் இருப்பதுபோல உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் ஆக்டோபஸ் ஜோதிடம் பிரபலமாக இருக்கிறது. ஜெர்மனியில் உள்ள மீன் காட்சியகத்தில் உள்ள பால் எனும் ஆக்டோபஸ் தனது எண்ணற்ற கரங்களில் ஒன்றின் மூலம் போட்டியில் பங்கேற்கும் இரண்டு நாடுகளில் ஒரு நாட்டை தேர்வு செய்கிறது.

நாடுகளின் கொடிகள் வைக்கப்பட்ட நீர்த் தொட்டிகளில் ஏதாவது ஒன்றை இந்த ஆக்டோபஸ் தொடும் பட்சத்தில் அந்த நாட்டின் பக்கமே வெற்றி இருக்கும் என கருதப்படுகிறது. இரண்டாவது அரையிறுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று ஆக்டோபஸ் பாலிடம் கேட்டபோது அது ஸ்பெயினுக்கு பச்சை கொடி காட்டியுள்ளது. இதுவரை ஆக்டோபஸ் பால் சொல்லிய ஜோதிடம் ஒரே ஒரு முறை மட்டுமே பொய்த்துள்ளதாம். இந்த முறை என்னவாகிறது என பார்ப்போம்.
| |

?????? :