.
 
 
 
 
 
 

ஐநா செயலாளர் எச்சரிக்கை

.

Monday, 05 April, 2010   01:43 PM
.
நூக்கஸ், ஏப். 5:உஜ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள ஏரல் கடலில் தாவர உயிரினங்களுக்கு பேரழிவு ஏற்பட்டு இருப்பதால் இதனை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை என ஐநா பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார். 
.
மத்திய சோவியத் ஆசியாவிற்கு வருகை தந்துள்ள ஐநா பொதுச் செலயலாளர் பான் கி மூன் ஏரல் கடற்கரையை ஹெலிகாப்டர் மூலம் பறந்து சென்று பார்வையிட்டார்.

தாவர உயிரினங்கள் அழிந்து வருவதால் ஏரல் கடற்கரை மாசுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மீன் பிடித்தொழில் மற்றும் பொருளாதார நிலை பாதிக்கப்படும்.

உலகிலேயே ஏரல் கடலில் மட்டும் தான் மோசமான பேரழிவு ஏற்பட்டு வருவது கண்டு தான் அதிர்ச்சி அடைந்ததாகவும், உஜ்பெகிஸ்தானும், அண்டை நாடுகளும் தங்கள் வேற்றுமைகளை மறந்து ஏரல் கடலை சீரமைக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென ஐநா பொதுச் செயலாளர் பான் கி மூன் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
| |

?????? :