.
 
 
 
 
 
 

ரேசுக்கு தயாராகும் அஜீத்

.

Thursday, 01 April, 2010   02:55 PM
.
லண்டன், ஏப். 1:ஐரோப்பாவில் நடைபெறும் பார்முலா2 கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ள நடிகர் அஜீத் அதற்கான தீவிர தயாரிப்பு மற்றும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
.
நடிகர் அஜீத்துக்கு கார் பந்தயத்தில் மிகுந்த ஈடுபாடும் ஆர்வமும் உண்டு. உள்ளூர் மற்றும் சர்வதேச கார் பந்தயங்களில் அவர் பங்கேற்றிருக்கிறார்.  

இந்நிலையில் ஐரோப்பாவில் நடைபெறும் பார்முலா 2 கார் பந்தயத்தில் பங்கேற்க  அஜீத் ஒப்பந்தமாகியுள்ளார். இதற்காக நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் அவர்தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

பார்முலா2 பந்தயத்தில் ஓட்ட உள்ள கார் தனக்கு பொருத்தமாக இருக்கிறதா என்பதை சமீபத்தில் அஜீத் பரிசோதனை செய்து பார்த்தார்.  இங்கிலாந்தில் உள்ள பெட்போர்டு நகரில் அஜீத் பார்முலா2 காரில் அமர்ந்து பரிசோதனை  மற்றும் பயிற்சியில் ஈடுபட்டார்.
| |

?????? :