Advertisements




 
 
 
 
 
 

செல்போன் கடையில் திருட்டு

.

Sunday, 21 February, 2010   12:38 PM
.
சென்னை, பிப்.21:சென்னை அண்ணாநகர் ஆர்ச் அருகே உள்ள செல்போன் சர்வீஸ் கடையின் ஷட்டரை உடைத்து 13 செல்போன்கள் திருடப்பட்டுள்ளன.இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
.

அறிஞர் அண்ணா சித்த மருத்துவ மனை எதிரே உள்ள செல்போன் கடையில் நேற்றிரவு மர்ம நபர்கள் ஷட்டரின் பூட்டை உடைத்துள்ளனர். கடையில் இருந்த 13 செல்போன்கள் திருடப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.20 ஆயிரம் இருக்கும் என்று கூறப் படுகிறது.இது தொடர்பாக கடை உரிமையாளர் கமல் கொடுத்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
| |

மற்றவை :