என்ஜினியர் உள்பட 3 பேர் கைது |
||
. |
||
Monday, 08 February, 2010 10:57 AM
|
||
| . | ||
சென்னை, பிப்.8:இ-மெயில், செல்போன் மூலம் பெண் குரலில் இன்டர்வியூ செய்து வேலைக்கான போலி உத்தரவை கொடுத்து 8 பேரிடம் ரூ.2.50 லட்சம் மோசடி செய்த என்ஜினியர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். |
||
| . | ||
சென்னையை சேர்ந்த கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றின் முதன்மை இயக்குனர் சுரேஷ் பெரியசாமி போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை கிடைத்ததாக போலி பணி நியமன உத்தரவை வழங்கியும் அதற்கு முன் இ-மெயில் மற்றும் செல்போன் மூலம் பெண் குரலில் இன்டர்வியூ செய்து 8 பேரிடம் ரூ.2.50 லட்சம் மோசடி செய்து உள்ளதும் இதில் ஈடுபட்ட வர்கள் என்ஜினியர்களான கார்த்திகேயன், ராஜா மற்றும் ராஜூ என்பதும் தெரிய வந்தது. மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். |
||
![]() |
||
மற்றவை : |
||
|
|
||























