Advertisements




 
 
 
 
 
 

வாலிபரைக் கொன்று பிணம் வீச்சு

.

Thursday, 04 February, 2010   10:30 AM
.
சென்னை, பிப்.4:வழிப்பறி செய்த நகையை விற்று பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு அவரது பிணம் சாக்குமூட்டையில் அடைக்கப்பட்டு பக்கிங்காம் கால்வாயில் வீசப்பட்டது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் கும்பல் போலீசாரிடம் பிடிபட்டது.
.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-வியாசர்பாடி கல்யாணபுரத்தை சேர்ந்தவர் கலையரசன். சுங்குவார் சத்திரத்தை சொந்த ஊராகக் கொண்ட இவரது மனைவி தாமரைச் செல்வி. இவர்களுக்கு உமா மகேஸ்வரி (வயது 6), இளவரசன் (வயது 4) என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

கலையரசனை கடந்த 28-ம் தேதி முதல் காணவில்லை. எனவே அவரது மனைவி தாமரைச்செல்வி தனது கணவரை நண்பர்களின் வீடுகள் உள்ளிட்ட பல இடங் களிலும் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.எனவே அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே கமிஷனர் உத்தரவின் பேரில் வடசென்னை பகுதியில் வழிப்பறி கொள்ளையர்களை பிடிப்பதற்காக சப்-இன்ஸ் பெக்டர் ராஜ்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் சங்கிலிப்பறிப்பு திருடன் மனோஜ்ராஜ் என்பவனை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் அவன் காணாமல் போன கலையரசனின் நண்பன் என்பது அம்பலமானது.

மனோஜ்ராஜ்-, கலையரசன் மற்றும் மணிகண்டன், பிரபு, காமேஷ், பிரபா, சதீஷ் ஆகிய அவர்களது நண்பர்கள் ஒன்று சேர்ந்து பேசின்பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் அரங்கோணத்தை சேர்ந்த பாக்கியமேரி என்ற பெண்ணிடமிருந்து 5 சவரன் தங்க நகையை வழிப்பறி செய்துள்ளனர்.அதனை கலையரசன் விற்று விட்டு எடுத்து வந்த பணத்தில் எல்லோரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.

அப்போது கொள்ளைப் பணத்தில் தனக்கு அதிக பங்கு கேட்டுள்ளான் கலையரசன். இதனால் அவனுக்கும், மற்றவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் மனோஜ்ராஜிடம் மற்றவர்களும் கலையரசன் தலையில் பீர் பாட்டிலால் ஓங்கி அடித்துள்ளனர். இதில் அவன் மயங்கி விழுந்ததும் அவனை கத்தியால் குத்தி கொலை செய்து பிணத்தை சாக்குமூட்டையில் அடைத்துள்ளனர்.

பின்னர் உடலை அவர்கள் பக்கிங்காம் கால்வாயில் வீசி விட்டு சென்று விட்டனர். இத்தகவல்கள் மனோஜ்ராஜிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் கூறினர்.பின்னர் மனோஜ் ராஜ் அடையாளம் காட்டிய இடத்திலிருந்து கலையரசனின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அதனை போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து மனோஜ் ராஜுடன் பிரபு ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் பிரபா, சதீஷ், காமேஷ் என்ற மற்ற மூன்று பேரும் மற்றொரு வழக்கு தொடர்பாக அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.இதனையடுத்து மனோஜ்ராஜ், மணிகண்டன், பிரபு ஆகிய மூவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கணவர் கொலை குறித்து தாமரைச் செல்வி கூறுகையில், “திருமணமான நாளிலிருந்து ஒருநாளும் என் கணவர் வீட்டுக்கு வராமல் இருந்ததில்லை. அவரது நண்பர்களிடம் கேட்டும் அவர்கள் உண்மையை சொல்லவில்லை. கடையில் எல்லோரும் ஒன்று சேர்ந்து என் கணவரை கொலை செய்து விட்டனர்” என்று கூறி கதவி அழுதார்.
| |

மற்றவை :