Advertisements




 
 
 
 
 
 

தெலுங்கானா விவகாரம்: ப.சிதம்பரம்

.

Friday, 29 January, 2010   11:26 AM
.
புதுடெல்லி,ஜன.29:ஆந்திராவைப் பிரித்து தெலுங் கானா தனி மாநிலம் அமைக்கும்  விவ காரம் குறித்து ஆய்வு செய்வதற்கு கமிட்டி ஒன்று அமைக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
.
இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘கிட்டத்தட்ட இந்த நடவடிக்கையின்  இறுதியில் உள்ளோம். அனைத்தும் சரியாக அமையும் பட்சத்தில் அடுத்த வாரம் நாங்கள் கமிட்டி ஒன்றை அறிவிக்க உள்ளோம்’ என்றார்.

இது பற்றி மூத்த மத்திய அமைச்சர் ஒருவர் கூறுகையில், ‘தெலுங்கானா விவகாரம் குறித்து ஆய்வு செய்வதற்கு அமைக்கப்பட உள்ள கமிட்டிக்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமை ஏற்கலாம் என்றும், அந்த கமிட்டி ஆய்வு செய்ய வேண்டிய விவகாரங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும்  தெரிவித்தார்.

தெலுங்கானா ஆதரவு தலைவர்கள் இந்த கமிட்டியானது தனது பணிகளை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தாலும், இந்த கமிட்டி ஓராண்டு வரை சம்பந்தப் பட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசனைகளை மேற் கொள்ளும் என்று கூறப்படுகிறது.

தெலுங்கானா விவகாரத்திற்காக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு  வருத்தம் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ‘இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மிகவும் வேதனையானது. அது முழுவதுமாக தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்’ என்றார்.

இதனை தடுத்து நிறுத்துவதற்கு பெற்றோர்களுக்கும், ஆசிரியர் களுக்கும் பொறுப்பு உள்ளது என்று தெரிவித்த சிதம்பரம், தெலுங்கானா விவகாரம் காரணமாக  பெரிய அளவில் சட்டம் ஒழுங்கு மீறல்கள் ஏற்படவில்லை. எங்கள் வாக்குறுதிகளை நாங்கள் கடை பிடிப்போம் என்றும் தெரிவித்தார்.

தெலுங்கானா விவகாரத்தை தாமதப்படுத்தும் ஒரு தந்திரமாகவே மத்திய அரசு கமிட்டியை பயன் படுத்தக்கூடும் என்று பிஜேபி அச்சம் தெரிவித்துள்ளது.கமிட்டிக்கு கால வரையறை செய்து தெலுங்கானா மசோதாவை வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்று பிஜேபி செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவ்தேக்கர் கூறியிருக்கிறார்.

நிராகரிப்பு
:இதனிடையே சிதம்பரத்தின் அறிவிப்பு குறித்து ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற அவசர கூட்டத் தில் ஆய்வு செய்த தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழு, தெலுங் கானாவை வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்கள் தொடரும் என்றும், எம்எல்ஏக்களின் ராஜினாமாக்களை ஏற்குமாறு தொடர்ந்து வலியுறுத்து வோம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
| |

மற்றவை :