.
 
 
 
 
 
 

பக்கவாதத்தால் அவதியுற்ற வேலுபிள்ளை

.

Friday, 08 January, 2010   11:21 AM
.
கொழும்பு,ஜன.8:மறைந்த விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தந்தை இலங்கை ராணுவ முகாமில் நீண்ட நாள் பக்கவாதத்தால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இதன் காரணமாக அவரது உடல் நிலை மோசமடைந்து படுத்த படுக்கையாக இருந்த நிலையிலேயே அவர் மரணமடைந்துள்ளார்.
.
இதுபற்றி ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரா கூறியிருப்பதாவது:கடந்த மே மாதம் நடைபெற்ற இறுதிக்கட்ட மோதல்களின் போது மோதல் வலயத்திலிருந்து இடம் பெயர்ந்து வந்த பொது மக்களுடன் தங்கியிருந்த நிலையில் பிரபாகர னின் பெற்றோர் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து கூடுதல் விசாரணைகளுக்காக கொழும்புக்கு  இவர்கள் அழைத்து வரப்பட்ட நிலையில் அவர்களின் வேண்டு கோளுக்கிணங்க பனாகொட ராணுவ முகாமில் பாதுகாப்பு சகிதம் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.வன்னி இறுதிக்கட்டப்போர் நடவடிக்கைகளின் பின்னர் ராணுவத் தினரால் கைது செய்யப்பட்ட பிரபாகரனின் தந்தையும் அவரது தாயும்  கடந்த வருடம் ஜூலை மாதம் 2ந் தேதி அவர்களின் விருப்பத்தின் பேரிலேயே பனாகொட ராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

அதேசமயம் நீண்ட காலமாக பக்கவாதம் நோயினால் பாதிக்கப் பட்டிருந்த அவர் ஒரு மாதத்துக்கும் மேலாக கொழும்பு தேசிய மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தார்.பின்னர் மீண்டும் பனாகொட ராணுவ முகாமிற்கே அழைத்து வரப்பட்ட போதும் நடமாட முடியாத நிலையில் தொடர்ந்தும் படுக்கையி லேயே இருக்கும் வகையில் அவரது உடல் நிலை மோசமடைந்திருந்தது.  இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அவர் நேற்று முன்தினம் இரவு இயற்கை மரணம் எய்தினார்.

அவரது இறுதிச்சடங்குகள் அவரது மனைவி மற்றும் உறவினர்களின் விருப்பப்படி நடத்தப்படும். அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.இவ்வாறு உதயநாணயக்காரா தெரிவித்துள்ளார்.
| |

?????? :