.
 
 
 
 
 
 

பொன்சேகா உறுதி

.

Friday, 08 January, 2010   11:10 AM
.
கொழும்பு, ஜன.8:இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடும் அந்நாட்டின் முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா,  தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் நம்பத் தகுந்த மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்று  உறுதியளித்துள்ளார்.
.
இம்மாதம் 26ந் தேதி நடைபெற உள்ள இலங்கை அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் தற்போதைய அதிபர் மகிந்தா ராஜபக்சேவுக்கும், அவரை எதிர்த்து போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இரு தரப்பினரும் தமிழர்களின் ஓட்டுகளை பெறுவதற்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள். இத்தேர்தலில் ஒரு புதிய திருப்பமாக  விடுதலைப் புலிகளை ஆதரித்து வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பொன்சேகா வுக்கு ஆதரவு அளிக்க முன்வந்தி ருப்பதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் தலைநகர் கொழும்பில் நேற்று பொன்சேகா தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். 10 அம்சங்கள் கொண்ட அந்த தேர்தல் அறிக்கையில் தான் அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டால் நாட்டில் நம்பத்தகுந்த மாற்றங்கள் ஏற்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

ஆயினும் தமிழர்கள் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண்பது பற்றியோ, நாட்டின் இதர முக்கிய பிரச்சனைகள் குறித்தோ அதில் எந்த குறிப்பான அறிவிப்புகளும் இடம்பெறவில்லை.பொருளாதார பிரச்சனைகள் குறித்தும் அந்த தேர்தல் அறிக்கையில் பொதுவான முறையில் தான் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, எந்த தெளிவான மற்றும் குறிப்பான அணுகுமுறைகள் குறித்தும் தெரிவிக் கப்படவில்லை.

தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் பொன்சேகாவை ஆதரிக்கும் 18 கட்சிகள் கொண்ட கூட்டணியான ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே, இலங்கையின் முன்னாள் வெளி யுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ஆனால் பொன்சேகாவை ஆதரிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
| |

?????? :