சிபுசோரன் பேட்டி |
||
. |
||
Thursday, 24 December, 2009 12:48 PM
|
||
| . | ||
ராஞ்சி, டிச. 24:ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகியிருப்பதை அடுத்து, நான் தான் முதலமைச்சர், இதில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை என்று ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் கூறியுள்ளார். |
||
| . | ||
ஜார்கண்ட் மாநிலத்துக்கு 5 கட்டமாக நடந்த சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் பாபுலால் மராண்டியின் ஜார்கண்ட் விமுக்தி மோர்ச்சா கூட்டணி 25 இடங்களை கைப்பற்றியது. இதனால் அந்த கூட்டணிக்கு பெரும்பான்மை பெற 16 இடங்கள் குறைவாக கிடைத்துள்ளன. ஜார்கண்டில் ஆட்சி அமைக்க 13 சுயேட்சை எம்எல்ஏக்கள் மற்றும் தனித்து நின்று 18 இடங்களில் வென்றுள்ள ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ஆதரவை பெற காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டுள்ளது. பிஜேபி 18 இடங்களையும், அதன் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதாதள் 2 இடங்களையும் பிடித்துள்ளன. இந்தநிலையில் ஜார்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சர் பதவி விஷயத்தில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை என்று ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரன் கூறியுள்ளார்.முதலமைச்சர் பதவியை தனக்கு தர முன்வரும் எந்த கூட்டணி ஆதரவுடனும் ஆட்சி அமைக்க தான் தயாராக இருப்பதாகவும், அது ஐக்கிய முற்போக்கு கூட்டணியாகவும் இருக்கலாம், தேசிய ஜனநாயக கூட்டணியாகவும் இருக்கலாம் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். எண்ணிக்கையின் அடிப்படையில் அரசு அமைப்பது தொடர்பான பேச்சுக்கள் நடைபெறும் என்று அவர் கூறினார். சிபு சோரனின் மகன் ஹேமந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜே.எம்.எம். கட்சி இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று தெரிவித்தார். இதற்கிடையே 13 சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் வழிமுறைகள் குறித்து காங்கிரஸ் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது. 6 தொகுதிகளை வென்றுள்ள லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தள் கட்சியும் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதால், முதலமைச்சர் பதவியை அக்கட்சி சிபு சோரனுக்கு விட்டுக்கொடுப்பதில் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. |
||
![]() |
||
மற்றவை : |
||
|
|
||























