.




 
 
 
 
 
 

ஹெட்லியின் கிரிமினல் சதி

.

Tuesday, 08 December, 2009   11:16 AM
.
சிகாகோ, டிச.8:மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு கிரிமினல் சதியில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் கைது செய்யப் பட்டுள்ள பாகிஸ்தான் வம்சா வளியைச் சேர்ந்த தீவிரவாதி டேவிட் கோல்மேன் ஹெட்லி மீது சிகாகோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.
.
கடந்த ஆண்டு நவம்பரில் மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்பு 2 ஆண்டுகள் அங்கு  தங்கியிருந்து தாக்குதல் நடத்தும் இடங்கள் குறித்து நோட்டமிட்டதாகவும், மேலும் பல் வேறு பிரிவுகளின் கீழும் ஹெட்லி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்இ தொய்பா தீவிரவாத இயக்கத்திற்காக இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கடந்த அக்டோபர் மாதம் டேவிட் கோல்மேன் ஹெட்லி (வயது 49) அவரது நண்பர் டகாவார் ராணாவுடன் அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எப்பிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் எப்பிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை நடத்திய தீவிரவாதிகளுடன் இவர் பலமுறை தொலைபேசியில் பேசி இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.மும்பை தாக்குதல் சம்பவம் போன்று இந்தியாவின் மற்ற நகரங்களிலும் தாக்குதல் நடத்த இவர் திட்ட மிட்டதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானில்  லஷ்கர் இதொய்பா வின் பயங்கரவாத முகாம்களில் பயிற்சி பெற்றதாகவும்,  அங்குள்ள தீவிரவாதிகளோடு  சேர்ந்து இந்தியா விலும், டென்மார்க்கிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் விசாரணையில் ஹெட்லி ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மும்பை பயங்கர வாத தாக்குதல் சம்பவத்திற்கு அவர் கிரிமினல் சதி செய்ததாக சிகாகோ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.இதனிடையே ஹெட்லியிடம் நடத்தப்பட்ட விசாரணை விவரங்களை தெரிவிப்பதற்காக எப்பிஐ அதிகாரிகள் குழு 2 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தது.
| |

?????? :