.
 
 
 
 
 
 

ரெயில்வே பொருள் திருட்டு

.

Wednesday, 02 December, 2009   03:26 PM
.
விழுப்புரம், டிச.2:ரெயில்வே பொருட்களை திருடிய வரை போலீசார் கைது செய்தனர்.
.
விழுப்புரம் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் தினகர் மற்றும் போலீசார் விழுப்புரம் ஜனாகிபுரம் பகுதியில்  ரோந்து சென்றனர். அப்போது  அந்த வழியாக மூட்டை ஒன்றுடன் சென்ற கண்டம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜவேலுவை (வயது 30) பிடித்து  மூட்டையை சோதனை செய்தனர்.

அந்த மூட்டையில் ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள ரெயில்வே பொருட்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அவற்றை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைப்பற்றியதோடு  ராஜவேலுவை கைது செய்தனர். தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
| |

?????? :