.
 
 
 
 
 
 

ஜப்பான் குழுவின் இசைமழை

.

Wednesday, 18 November, 2009   03:47 PM
.
சென்னை, நவ. 18:ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இசைக்குழு ஒன்று சென்னை நகர ரசிகர்களுக்கு இன்றும், நாளையும் இசை விருந்து படைக்க இருக்கிறார்கள். ஜப்பான் நாடு பல தீவுகளை கொண்டது. அதில் ஒன்றான  ஒஹினா பாரம்பரிய இசைக்கு புகழ் பெற்றது.
.
இந்தியா மற்றும் சீனாவின் இசை தாக்கம் கொண்ட அந்த பாரம்பரிய இசை தற்போது நவீன வடிவம் பெற்று மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த தீவுபகுதியைச் சேர்ந்த  கனஹோ கடோமா என்ற இளம் அழகி சான்சின் என்ற புகழ் பெற்ற இசைக் கருவியை வாசிப்பது பாண்டித்துவம் பெற்றதுடன்,  இனிமையான குரலில் பாடுகிறார். நாட்டுப்புற பாடல்களை தனது பள்ளி பருவத்திலேயே பயின்ற அவர்,  சான்சின் கருவியை இசைக்கும் பயிற்சியை தனது பாட்டியிடம் பயின்றார். அவரைப்போலவே சான்சின் கருவியை இசைப்பதிலும், வாய்பாட்டிலும்  தேர்ச்சி பெற்ற யாசுகட்சு ஒசிமா ஏற்கனவே பல நாடுகளில் சுற்றுப்பயணம் மேற் கொண்டு இசைவிருந்து படைக்க விருக்கிறார்.  இசைத் தொகுப்பு களையும் வெளியிட்டிருக்கிறார்.

சன்டே என்றழைக்கப்படும் சதோஷி நாகசோனே டிரம்ஸ் வாசிப்பதில் புகழ் பெற்றவர். பல்வேறு இசைக்குழுக் களில் பங்கேற்று ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றவர். இந்த மூவர் கொண்ட இசைக்குழு  முதல் முறையாக இந்தியா வந்துள்ளது.  சென்னையில் இன்றும், நாளையும் ராணி சீதை ஹாலில் இசை விருந்து படைக்கிறார்கள். இதற்கான அனுமதி இலவசம்.

சென்னையில் அவர்கள் தங்கியிருக்கும் போது இந்திய இசை பற்றிய விவரங்களை அவர்கள் அறிந்து கொள்வதற்கு இந்திய ஜப்பான் நட்புறவு கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
| |

?????? :